சினிமா

பிகில் பட பாணியில் கால்பந்து போட்டி நடத்திய மலேசியா பள்ளி! தீயாய் பரவும் புகைப்படம்.

Summary:

Bigil malasiya school

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் தான் பிகில். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

மேலும் இந்த தமிழர்கள் மட்டுமின்றி உலக நாடுகளில் வாழும் அனைத்து ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் மலேசிய நாட்டில் பிகில் படம் அதிகப்பட்ச வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் அங்கு ஒரு பள்ளியில் கால்பந்து பெனால்டி போட்டிக்கு ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். அதாவது பிகில் படத்தில் விஜய் பெண்களுக்கு பயிற்சி கொடுக்கும் போது கோல்போஸ்டின் நான்கு மூளைகளில் மட்டும் இருக்கும் சிறிய இடைவெளியில் பந்தை அடிக்கவேண்டும் என்று கூறியிருப்பார்.

அதேபோல் தற்போது மலேசிய பள்ளி ஒன்றில் போட்டி நடத்தியுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


Advertisement