பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் மொத்த லிஸ்ட் ரெடி.. யார்? யார்? தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் மொத்த லிஸ்ட் ரெடி.. யார்? யார்? தெரியுமா?


biggboss-season-7-contestants-list

பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 7 சீசன் வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Biggboss 7

இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸில் 2 வீடுகள் இடம் பெறும் சமீபத்தில் வெளியான புரோமோ வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் மொத்த போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

Biggboss 7

அதன்படி, கோவை பெண் ஓட்டுநர் ஓட்டுநர் ஷர்மிளா, நடிகர் பயில்வான் ரங்கநாதன், நடிகர் சந்தோஷ் பிரதாப், காக்கா முட்டை விக்னேஷ், நடிகர் பப்லு ப்ரித்விராஜ், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், நடிகைகள் தர்ஷா குப்தா, உமா ரியாஸ், சோனியா அகர்வால், ரோஷினி, அம்மு அபிராமி, ரேகா நாயர், ரவீனா, விஜய் டிவி பிரபலங்கள் மாகபா ஆனந்த், ஜாக்குலின், ரக்‌ஷன், சரத் மற்றும்  பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.