என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
பிக்பாஸ்2 டைட்டில் வின்னர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பின் நடிகை ரித்விகா ஒரு வாரத்திற்குப் பிறகு முதல் முறையாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.பிக் பாஸ்2 நிகழ்ச்சியின் இறுதி போட்டி வெற்றியாளராக ரித்விக்கா அறிவிக்கப்பட்டு ரூபாய் 50,00,000 பெற்று சென்றார்.மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ரித்விக்கா வெற்றி பெற்றார்.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் 106 நாட்கள் நடைபெற்று கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிந்தது. பல உணர்ச்சிகரமான நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த சீசன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மூன்றாவது இடம் :இரண்டாவது ரன்னராக அப்_பாக விஜயலட்சுமி அறிவிக்கப்பட்டார். அவரை பிக் பாஸ்1 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரோவ் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று, மேடைக்கு அழைத்து வந்தார்.
ரன்னர்-அப் :முதல் ரன்னர் அப்-பாக ஐஸ்வர்யா அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டுக் கிளம்பும்போது கண்கலங்கினர். அவரை கமல்ஹாசன் மேடைக்கு அழைத்து வந்தார்.
டைட்டில் வின்னர் :இறுதியாக ஐஸ்வர்யா_வும் ரித்விக்கா_ வும் பிக்பாஸ் 2 சீசனில் வீட்டுக்குள் இருந்தனர்.அதில் வெற்றியாளர்கள் யாராக இருக்கும் என்ற சூழலில் பிக்பாஸ் 2 சீசனின் வெற்றியாளர்களாக மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ரித்விக்கா வெற்றி பெற்றார்.
இதில் கடைசி நாளில் வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கப்பட்டார். அவருக்கு ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகிறார்கள்.
அதில் தனக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் எல்லாருக்கும் வணக்கம். நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது, நிறைய பேர் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணிருக்கீங்க. நான் வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது. ரித்விகா பேன்ஸ், ரித்விகா ஆர்மி என நிறைய கணக்குகளை தொடங்கி எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கிறீர்கள்.பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது என்பதால் ஒரு வாரத்திற்குப் பின் இந்த வீடியோவை பதிவிடுவதாகவும் கூறியுள்ளார்.