வனிதாவுக்கு செம நோஸ்கட் கொடுத்த கமல்! சூப்பர் வீடியோ உள்ளே!Bigg boss vanitha kamal video

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. மூன்று வாரங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த வாரம் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் தற்போது 15 பிரபலங்கள் விளையாடிவரும் வேளையில் அதில் நடிகை வனிதாவும் ஒருவர். பிக்பாஸ் முதல் நாளில் இருந்து சக போட்டியாளர்களிடம் சண்டைபோட்டு வரும் இவர் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் போட்டியாளர்கள் அனைவரையும் கமல் சந்திக்கும்போது அபிராமி பற்றி குறைகூறிய வனிதாவை கமல் வனிதாவின் மூக்கை உடைத்தார். தாம் எந்த அளவிற்கு பேசுகிறோமோ அதே அளவிற்கு கேட்கவும் வேண்டும் என்றதும் வனிதாவின் முகமே மாறிவிட்டது.