இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்தான்? வெளியான தகவல்கள்.

பிக் பாஸ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடக்கத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள் உடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 3 இதுவரை 60 நாட்களை கடந்துள்ளது.
முக்கோணக் காதல் கதை, சரவணின் திடீர் வெளியேற்றம், மதுமிதாவின் தற்கொலை முயற்சி, வனிதாவின் தூண்டிவிடும் செயல் என பிக் பாஸ் சீசன் 3 ரசிகர்களை மிகவும் ஆவலுடன் அழைத்துச் செல்கிறது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப் படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற கஸ்தூரி, சேரன், சாண்டி, தர்ஷன் ஆகியோரது பெயர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.
இதில் சாண்டி மற்றும் தர்ஷனுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், கஸ்தூரியுடன் சேரனை ஒப்பிடும் போது சேரனுக்கு மிக அதிக ஓட்டுகள் கிடைத்து இருக்கலாம் என்றும், இதனால் கஸ்தூரி இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.