பிக்பாஸ் இல் அதிரடி மாற்றம்! திடீரென விலகிய தொகுப்பாளர்! களமிறங்கிய பிரபல நடிகை!

பிக்பாஸ் சீசன் மூன்று தமிழில் சிறப்பாக நடந்துவருகிறது. தமிழை பொறுத்தவரை சீசன் ஒன்றில் தொடங்கி தற்போது சீசன் மூன்று வரை உலகநாயகன் கமலகாசன் தொகுத்து வழங்கிவருகிறார். தமிழில் பிக்பாஸ் ஒளிபரப்பாவது போலவே ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் பிக்பாஸ் சீசன் நடந்துவருகிறது.
இந்நிலையில் தெலுங்கில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் மூன்றை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கிவருகிறார். ஏறக்குறைய 40 நாட்களை கடந்துவிட்ட தெலுங்கு பிக்பாஸ் சீசனில் கடந்த வாரம் வரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்த நடிகர் நாகர்ஜுனா தனது 60 வது பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்துடன் ஸ்பெய்ன் நாட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை அவரால் தொகுத்து வழங்க முடியவில்லை. இதனால் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நாகார்ஜூனா இடத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணனை பார்த்ததும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் அவரை வரவேற்றனர்.