இடுப்பு விசயத்துல வீக்கா? அக்கா என அழைத்து இடுப்பை கிள்ளி விளையாடும் ஜெப்ரி.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!



  Bigg Boss Tamil Season 8 Jeffry Activity with Girl Contestants 

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டி, நாளையுடன் நிறைவுபெறுகிறது. இந்த போட்டியில் இடம்பெற்ற போட்டியாளர்களின் ஜெப்ரி இளவயது நபராக கவனிக்கப்பட்டார். 

தன்னை பார்த்து, தான் பேசும் கருத்துக்கு யாரும் சிரித்தால் எதுக்கு சிரிக்கிற? என பொங்கியவர், எலிமினேஷனுக்கு பின் மீண்டும் வீட்டுக்குள் வைத்தபோது, சக போட்டியாளர்களின் வருத்தத்தை தனியாக வந்து சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். 

போட்டியில் இருக்கும்போது ஒருசில இடங்களில் வார்த்தையை விட்டது என நிகழ்ச்சி ஒளிபரப்பில் அவை தவிர்க்கப்பட்டாலும், பலரும் உன் வாயை கட்டுப்படுத்து என நாசுக்காக அறிவுரை வழங்கி இருந்தனர். 

இதையும் படிங்க: "இருவரும் உண்மையா இல்ல, ரொம்ப வீக்" - சுனிதாவால் கதறியழுத சௌந்தர்யா, ஜாக்குலின்.!

தர்ஷாவிடம் குறும்பு செய்யும் ஜெப்ரி

ஆனால், அவரின் கைகளைத்தான் கட்டுப்படுத்த சொல்லிக்கொடுக்கவில்லை என்பதைப்போல, ஜெப்ரி பெண்களின் இடுப்பை பிடித்து கிள்ளுவது தொடர்பான சர்ச்சை சம்பவங்கள் நடந்தன. 

வீட்டுக்குள் இருக்கும்போதும், வெளியே சென்று வந்தபினரும் என பல போட்டியாளர்களின் இடுப்பில் கை வைத்தவர், தர்ஷா குப்தாவின் இடுப்பில் கிச்சு காண்பித்து விளையாடி இருக்கிறார்.

இந்த விஷயம் ஒருதரப்பில் இருவரும் நண்பர்கள் தானே, அதனால் என்ன? அவர்கள் விளையாடுகிறார்கள் என கூறப்பட்டாலும், மற்றொரு புறத்தில் உன் வீட்டில், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் தோழிகளிடம் எப்போதும் இப்படித்தான் இருப்பீர்களா? 

சிறுத்தை படத்தில் வரும் கார்த்திக்கின் கதாபாத்திரம் ராக்கெட் ராஜா போல, இடுப்பு விஷயத்தில் நீங்கள் வீக்கா? என கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

சிறுத்தை படத்தில் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தை உவமைப்படுத்தி நெட்டிசன் கேள்வி

:

இதையும் படிங்க: Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!