சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் ரேஷ்மா இந்த பிரபல தமிழ் நடிகரின் தங்கையாம்! யார் அந்த பிரபல நடிகர் தெரியுமா?

Summary:

Bigg boss reshma is sister of boby simha

பிக்பாஸ் சீசன் மூன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் ஓன்று மற்றும் இரண்டை தொடர்ந்து சீசன் மூன்றையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துள்ள இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக புஷ்பா புருஷன் காமெடி நடிகை ரேஷ்மா பங்கேற்றுவருகிறார். இவர் வாணி ராணி, வம்சம் போன்ற பிரபலமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், கடந்தவாரம் லக்ஸரி பட்ஜட்டிற்கான டாஸ்கில் தனது கடந்தகால வாழ்க்கை பற்றி கூறி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தார் ரேஷ்மா.

இந்நிலையில் ரேஷ்மா குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் பிரபல தமிழ் நடிகர் பாபி சிம்காவின் சகோதரியாம். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு இதுகுறித்து அவரே பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறியுள்ளார்.


Advertisement