பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த பழைய போட்டியாளர்கள்! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சாண்டி.

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த பழைய போட்டியாளர்கள்! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சாண்டி.


Bigg boss old contestants returns to bigg boss house

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 99 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் மூன்று இந்த வாரத்துடன் முடியவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் தற்போது 12 பேர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் 4 பேர் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

தர்சன் நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருந்த சிறந்த போட்டியாளர்களில் ஒருவரான தர்சன் இறுதி வரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் அவரின் திடீர் வெளியேற்றம் பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

bigg boss tamil

இந்நிலையில் போட்டியாளர்களை குஷி படுத்த இந்த சீஸனின் முந்தையை போட்டிட்டியாளர்களான மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா மற்றும் பாத்திமா பாபு ஆகியோரை வீட்டிற்கு அழைத்துள்ளார் பிக்பாஸ்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள பழைய போட்டியாளர்களை தற்போதுள்ள போட்டியாளர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி பரிசுகளை வழங்குகின்றனர்.