லாஷ்லியாவிடம் கேள்வி கேட்ட பிக்பாஸ் ரசிகர்! அழுதுகொண்டே பதில் கூறிய லாஷ்லியா! வீடியோ.



Bigg boss lashliya cries at stage

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 70 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இதுவரை இல்லாத அளவில் இந்த முறை கவின் - லாஷ்லியா இருவரிடையேயான காதல் விமர்சையாக காட்டப்படுகிறது. இன்று ஞாயிறு என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்திக்க கமல் வருகிறார். இந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ரசிகர்கள் வாரா வாரம் கேள்வி கேட்டுவருகின்றனர்.

bigg boss tamil

அந்த வகையில் பெண் ரசிகர் ஒருவர் இன்று லாஷ்லியாவிடம் சேரன்  - லாஷ்லியா இருவரிடையே இருக்கும் அப்பா - மகள் உறவு வெறும் நாடகம் என கவின் கூறியது பற்றி லாஷ்லியா ஏன் எதுவும் கூறவில்லை? அவர் மேல் ஏன் கோவப்படவில்லை என லாஷ்லியாவிடம் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த லாஷ்லியா இங்கே என்ன நடக்கிறது? எது நிஜம், எது பொய் என எனக்கே தெரியவில்லை. ஆனால் நான் எவ்வளவு உண்மையாக இருக்கின்றேன் என்பது எனக்கு நன்றாக தெரியும் என அழுதபடி லாஷ்லியா பதில் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.