வெளியே பார்த்ததை உள்ளே போய் என்ன சொன்னீங்க? சாக்ஷியை வெளுத்து வாங்கிய கமல்!



Bigg boss kamal question to shakshi

பிக்பாஸ் சீசன் 3 இதுவரை 75 நாட்களை கடந்துள்ள நிலையில் இன்னும் மூன்று வாரங்களே மீதம் உள்ளது. ஒருவழியாக போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டநிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் வனிதா மட்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த நிலையில் வணிதாவையும் சேர்ந்து தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வாரம் அதாவது நாளை ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட உள்ளார்.
bigg boss tamil

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்த இந்த சீஸனின் முன்னாள் போட்டியாளர்கள் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா போன்றவர்கள் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். வீட்டில் இருந்து வெளியே வந்ததும் கமலிடம் சாக்ஷி பேசுகிறார்.

அப்போது வெளியில் எப்படி தெரிகிறார் என ஷெரினிடம் சாக்ஷி சொன்ன விஷயம் பற்றி கமல் கேட்டு சாக்ஷியை வெளுத்தெடுத்துள்ளார். வெளியே பார்த்த விஷயத்தை ஏன் வீட்டிற்குள் சென்று சொன்னீர்கள் என ஷாக்சியை கேள்வி கேட்டுள்ளார் கமல்.