சினிமா

குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்லாமல் கதறிய பிரபல நடிகர்..! வீட்டிற்கே சென்று பிக் பாஸ் சினேகன் செய்த உதவி.! குவியும் வாழ்த்துக்கள்.!

Summary:

Bigg boss fame snehan helps theepeti ganeshan

ரேணிகுண்டா படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இவரது உண்மையான பெயர் கார்த்திக். இவர் நடிகர் அஜித்துடன் பில்லா 2 திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அணைத்து தொழில்களும் முடங்கி உள்ளது. குறிப்பாக சினிமாத்துறை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும்பாலான சினிமா தொழிலார்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், ஒருசில சினிமா படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள தீப்பெட்டி கணேசன் தான் பலரால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும், தற்போது குழந்தைகளுக்கு பால் வாங்க கூட காசு இல்லை, மேலும் தனது குடும்பத்திற்கு உதவி தேவைப்படுவதாகவும் மிகவும் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அஜித் சார் தனக்கு உதவி செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோவை பார்த்த ராகவா லாரன்ஸ், குழந்தைகளின் படிப்பு செலவுக்கு தான் உதவுகவதாக கூறியிருந்தார். இந்நிலையில். பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் அவர்கள், தீப்பெட்டி கணேசன் வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து, 2 வாரங்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் உணவு பொருட்களை வழங்கியுள்ளார்.

மேலும் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் இந்த வருடத்திற்கான படிப்பு செலவை சினேகன் நடத்திவரும் சினேகன் செயலகம் அறக்கட்டளை சார்பாக ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.


Advertisement