பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவர்தான். இறுதி தகவல்.



Bigg boss elimination this week

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருவதால் இந்த முறை பிக்பாஸ் சீசன் மூன்று பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். தற்போது 8 பேர் மட்டுமே மீதம் இருந்த நிலையில் இன்று ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த வாரம் கவின் வெளியேறுவார் என பலர் நினைத்திருந்த நிலையில் இன்று வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். வனிதா ஏற்கனவே ஒருமுறை வெளியேறி வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார். அவர் வந்ததில் இருந்தே பிக்பாஸ் வீடு பல்வேறு சர்ச்சைகளை, சண்டைகளை சந்தித்தது.

bigg boss tamil

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்திருந்த நிலையில் வனிதா தனது குழந்தைகளிடம் நடந்துகொண்ட விதம் அனைவர்க்கும் வனிதா மீது இருந்த கெட்ட அபிப்ராயத்தை சற்று மாற்றியது என்றே கூறலாம்.

அந்த நல்ல பெயருடன் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் வனிதா.