BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
முகம் வீங்கி பிக்பாசில் இருந்ததைவிட பலமடங்கு குண்டாக மாறிவிட்ட ஆர்த்தி.. புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்
முகமெலாம் வீங்கிப்போய் செம குண்டாக மாறியுள்ள பிக்பாஸ் புகழ் ஆர்த்தியின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் நடிப்பில் வெளியான அருள் திரைப்படம் மூலம் காமெடி நடிகையாக அவதாரம் எடுத்தவர் ஆர்த்தி. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கினார் ஆர்த்தி. இவரின் பப்ளியான தேகம், எதார்த்தமான நடிப்பு என தமிழ் சினிமாவில் இவரை புகழின் உச்சத்திற்கு அழைத்துச்சென்றது.
பெரிய நடிகர்களின் படங்களில் கூட காமெடி ரோலில் கலக்கிவந்த ஆர்த்தி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்ட மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தித்தரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் அது வெறும் எதிர்பார்ப்பாகவே அமைந்துவிட்டது.

தற்போது பெரிதாக எந்த படங்களில் நடிக்காத இவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக உள்ளார். இந்நிலையில் ஆர்த்தி சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தநிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
காரணம், முன்பு இருந்ததை விட தற்போது மேலும் குண்டாக மாற்றியுள்ளார் ஆர்த்தி. முகமெல்லாம் வீங்கிப்போய், பார்ப்பதற்கு அடையாளமே தெரியாதது போல் இருக்கும் அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.