மனைவி பிறந்த நாளுக்கு சர்பிரைஸ் கொடுத்த பிக் பாஸ் ஆரி.! என்ன ஸ்பெஷல்னு பார்த்தீங்களா.?bigg-boss-aari-surprise-to-his-wife

நடிகர் ஆரி அர்ஜுனன் தனது மனைவி நதியாவின்  பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆரி. பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு, பிக்பாஸ் பட்டத்தையும் தட்டிச்சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகர் ஆரிக்கு ரசிகர் கூட்டமும் அதிகரித்தது.

இந்தநிலையில் நடிகர் ஆரி சமீபத்தில் அவரது காதல் மனைவி நதியாவின்  பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாடியுள்ளார். இதில் நதியாவிற்க்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக நதியாவின் நண்பர்களை ஆரி அருஜுனன் அழைத்திருந்தார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷும் கலந்து கொண்டுள்ளார்.


இதனை அடுத்து இது குறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய என் மனைவி நதியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அந்த போஸ்ட்டில் கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்