சினிமா Bigg Boss

பல ஆண்டுகளுக்கு முன் பைக்கில் அமர்ந்திருக்கும் இந்த குட்டி பையன் இன்று பெரிய ஹீரோ.. யார் தெரியுதா? அவரா இது..?

Summary:

பிரபல நடிகர் மற்றும் தற்போதைய பிக்பாஸ் போட்டியாளர் ஆரியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிரபல நடிகர் மற்றும் தற்போதைய பிக்பாஸ் போட்டியாளர் ஆரியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஆரியம் ஒருவர். கடந்த 2005 ஆம் ஆண்டு ஆடும் கூத்து என்ற படத்தின் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் திரையில் வெளியாகவில்லை. ஆனாலும் தனது முயற்ச்சியை கைவிடாத ஆரி அடுத்ததாக ரெட்டச்சுழி, மாலைப்பொழுதில் மயக்கத்திலே போன்ற படங்களில் நடித்தார்.

இநிலைலையில் இவரது சினிமா பயணத்தில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்து, தமிழ் சினிமாவில் இவரை புகழின் உச்சத்திற்கு அழைத்துச்சென்ற படம் நெடுஞ்சாலை. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறினார் ஆரி. ஆனாலும் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக அவருக்கு கைகொடுக்கவில்லை.

தற்போது எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான், அலேக்கா என்ற ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இதனிடையே பிக்பாஸ் சீசன் நான்கில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிவருகிறார் ஆரி. சினிமா ஒருபுறம் இருந்தாலும் பல்வேறு சமூக சேவைகளையும் செய்துவருகிறார் ஆரி.

இந்நிலையில் ஆரி தனது சிறுவயதில் எடுத்துக்கொண்ட அவரது சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement