அத்துமீறிய பிக்பாஸ் புகழ் இளம் நடிகர் அதிரடி கைது! திடீர் பரபரப்பு - வைரலாகும் வீடியோ.



bigg-boss-3-contestant-arrested

பிக்பாஸ் தொடர் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். ஆனால், ஒருசிலர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பிரபலமாகின்றனர். ஒருசிலர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தேவை இல்லாத விவகாரங்களில் மூக்கை நுழைத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளவும் நடந்துவருகிறது.

அந்தவகையில் கன்னட பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஹுச்சா வெங்கட். இவரை போலிசார் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த காரில் இருந்தவரிடம் ரகளை செய்துள்ளார் ஹுச்சா வெங்கட்.

Bigg boss

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி அந்த நபரின் காரை அடித்து நொறுக்கியுள்ளார் ஹுச்சா வெங்கட். அவர் காரை அடித்து நொறுக்கும் காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.