இவர்கள்தானா?? பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

இவர்கள்தானா?? பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!


bigboss-ultimate-season-list

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன்  கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மிகவும் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் சென்று சமீபத்தில் முடிவடைந்தது. போட்டியில் கலந்துகொண்ட பன்முக கலைஞர் ராஜு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நாளை தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்றாலும், அந்த பட்டியலில் யாரெல்லாம் உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

bigboss

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன், வனிதா, ஜுலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி போன்றவர்கள்  கலந்து  கொள்ள போகிறார்கள் என  தகவல்  வெளியானது.

மேலும் ஸ்ருதி, பாலா, அபிராமி ஐயர், தாமரை, ரேகா, அனிதா சம்பத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இந்த போட்டியில் போட்டிபோடவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.