என்னது இவங்களெல்லாமா! அப்போ அனல் பறக்குமே! லீக்கான பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் லிஸ்ட்!!

என்னது இவங்களெல்லாமா! அப்போ அனல் பறக்குமே! லீக்கான பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் லிஸ்ட்!!


Bigboss ultimate contestants list leaked

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 5 கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. அதில் ராஜு பிக்பாஸ் ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்று 50 லட்சத்தை தட்டி சென்றார். இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சி ஓடிடியில் தொடங்கப்படவுள்ளது.

இதனை உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 5 பினாலே மேடையில் அறிவித்திருந்தார். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் லோகோவும் வெளியிடப்பட்டது. நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சி ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து வருகிறது. அதன்படி இதில் வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஓவியா, ஜுலி, யாஷிகா ஆனந்த்  ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 5 வில் கலந்து கொண்ட தாமரை, அபிஷேக்,பிரியங்கா இவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.