ராஜ்குமார், சிவாஜி, கமல், ரஜினி, ஜெமினி உட்பட பலருடன் நடித்த, பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்..!
இந்த வாரம் பிக்பாஸில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள்.! யார் யார் தெரியுமா?? வைரல் வீடியோ!!
இந்த வாரம் பிக்பாஸில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள்.! யார் யார் தெரியுமா?? வைரல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு தற்போது மக்களை கவர்ந்து தன்வசமாக்கி கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் 21பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இதில் நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து தானாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று சாந்தி மாஸ்டர், அசல் கோலார்,ஷெரினா, கடந்த வாரம் மகேஸ்வரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டனர். முந்தைய சீசனை விட இந்த சீசனில் சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது. அதில் போட்டியாளர்கள் ராபர்ட் மாஸ்டர், அசீம், நிவாஷினி, தனலட்சுமி, ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் நிவாசினி எலிமினேட் ஆவார் என கூறி வருகின்றனர். ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#Day36 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/K5Ni1AyPKQ
— Vijay Television (@vijaytelevision) November 14, 2022