Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
திடீரென சனம் ஷெட்டிக்கு ஆதரவாக களமிறங்கிய பாலாஜி! எதிர்த்து நின்ற போட்டியாளர்கள்! சூடுபறக்கும் வீடியோ இதோ!
திடீரென சனம் ஷெட்டிக்கு ஆதரவாக களமிறங்கிய பாலாஜி! எதிர்த்து நின்ற போட்டியாளர்கள்! சூடுபறக்கும் வீடியோ இதோ!

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள், அன்பு, அக்கறை, காதல், பஞ்சாயத்து என எதற்கும் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரத்தில் முதன்முறையாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வேல்முருகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் புதிய போட்டியாளராக பாடகி சுசித்ரா கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று சனம் ஷெட்டி பாலாஜியை எட்டி உதைக்க காலை தூக்கிய நிலையில், பாலாஜி சனத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு பிக்பாஸ் வீடே ரணகளமானது.
#Day30 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/RGjQTxTgmY
— Vijay Television (@vijaytelevision) November 3, 2020
ஆனால் இன்று வெளியான வெளியான பிக்பாஸ் ப்ரமோவில் டாஸ்க் ஒன்றில், சனத்திற்கு ஆதரவாக பாலாஜி பேசியுள்ளார். மேலும் போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவாகும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.