புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 8வது சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பல பரீட்சயமான சின்னத்திரை பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர்தான் சௌந்தர்யா. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் தாங்கள் பட்ட கஷ்டங்கள், சந்தித்த பிரச்சினைகளை பகிர்ந்தனர். அந்த வகையில் போட்டியாளரான சௌந்தர்யாவும் பல சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
Kadanthu Vantha Paadhai💥#Soundariya 🥺
— Troll Bigg Boss Tamil (@Tbbtamil) November 7, 2024
School la irunthey enoda voice vachu ellam enna bully panuvanga😢
Na earn pana full amt phone call scam
la poiduchu 😢😢#BiggBosstamil #BiggBoss8Tamil #BiggBossTamil8 #Sound #BiggBossTamilSeason8 #Soundarya pic.twitter.com/APsdGQvjci
இதையும் படிங்க: சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
அவர் கூறியதாவது, ஸ்கூலில் படிக்கும் போதிலிருந்தே எனது குரலை வைத்து பலரும் கலாய்ப்பார்கள். எனது குரலை நினைத்து பயத்தில் நான் ரொம்ப பேச மாட்டேன் என தான் சந்தித்த விமர்சனங்களை குறித்து பகிர்ந்து கொண்டார். பின்னர் சினிமாவில் நுழைந்தது குறித்தும் தனக்கு கிடைத்த சிறுசிறு வாய்ப்புகளை குறித்தும் பேசினார்.
எனது அப்பா மொழி கூட தெரியாமல் சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு, முன்னேறி தற்போது பேக்கரி வைத்துள்ளார். அவர்தான் எனது வழிகாட்டி. அவரைப் போலவே நானும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என எட்டு வருஷமாக சினிமாவில் உழைத்து, கஷ்டப்பட்டு சேர்த்து 17 லட்சம் வைத்திருந்தேன். ஒரே ஒரு scam போன் கால் மூலம் மொத்த பணத்தையும் மோசடி செய்து திருடி விட்டனர். ஒரே போனில் மொத்த பணமும் காலி. இந்த சம்பவம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் நடந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது என கதறி கண்ணீர் விட்டபடி பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!