சினிமா

பிக்பாஸ் ரசிகர்களுக்கு செம சந்தோஷமான செய்தி! ஆரம்பமாகிறது சீசன் 4! எப்போது தெரியுமா?

Summary:

Bigboss season 4 starting from october 4

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமா என கேள்விகள் எழுந்த நிலையில், பிக்பாஸ் நான்காவது சீசன் விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

அதனைத் தொடர்ந்து கமல் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 4வது சீசனுக்கான ப்ரோமோ வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 அக்டோபர் 4 ஆம் தேதி 6 மணிக்கு தொடங்கவிருப்பதாக விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் அறிமுகம் இருக்கும் என்பதால், முதல் நாளான அக்டோபர் 4ம் தேதி மட்டும் மாலை 6 மணிக்கே நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement