என்னது..பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 டைட்டில் வின்னர் இவங்தானா.! நல்ல ஜோடிதான்.! தீயாய் பரவும் தகவல்!!

என்னது..பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 டைட்டில் வின்னர் இவங்தானா.! நல்ல ஜோடிதான்.! தீயாய் பரவும் தகவல்!!


bigboss-season-2-title-winner-is-ameer-and-pavani

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அதனை தொடந்து பிக்பாஸ் போட்டியாளர்களின் நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முதல் சீசனில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்றனர்.  

மேலும் அந்த சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் வெற்றி பெற்றனர் இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ராஜு மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் நடுவர்களாக உள்ளனர்.

Bigboss jodikal

இந்த இரண்டாவது சீசனில் அமீர்-பாவனி, ஆர்த்தி-கணேஷ், அபிஷேக்-ஸ்ருதி, ஐக்கி பெரி-தேவ், தாமரை-பார்த்தசாரதி, சுஜா-சிவகுமார்,  வேல்முருகன்-இசைவாணி, டேனி-ரம்யா என 8 ஜோடிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இதன் இறுதி நிகழ்ச்சி 2 நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 2வது சீசனில் பாவனி மற்றும் அமீர் வெற்றிபெற்றுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.