சினிமா

பருத்திவீரன் சித்தப்பு இப்படிப்பட்டவரா? உண்மையை போட்டுடைத்த முதல் மனைவி!!

Summary:

bigboss saravanan first wife tell about her marriage

 பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று  இருப்பினும் அவற்றையெல்லாம் மீறி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வெற்றி பெற வேண்டும் என்பதே போட்டி.

bigg boss saravanan க்கான பட முடிவு

இப்போட்டியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக பருத்திவீரன் சித்தப்பு சரவணன் கலந்துகொண்டுள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில்  யாருடனும் அதிகம் பேசாமல் எப்பொழுதும் அமைதியாக இருப்பார். இந்தநிலையில் சமீபத்தில் சரவணன் தனது வாழ்க்கையில் நேர்ந்த அனைத்து சம்பவங்களையும், தனது மனைவி குறித்தும் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சரவணனின் முதல் மனைவி சூர்யா சமீபத்தில் அளித்துள்ளார். அதில் அவர்  நானும் சரவணனும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். வெகு நாட்களாகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. மேலும் எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள கூறினர்.

bigg boss saravanan first wife க்கான பட முடிவு

 நானும் அவரது நலனுக்காக அதற்கு சம்மதித்து, எனது கைகளாலேயே தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் நடத்தி வைத்தேன். இப்போது அவருக்கு குழந்தை இருக்கிறது. எனது கணவர் மிக நல்லவர். இப்பொழுதும் எனக்கு அவர்மீது மிகுந்த பாசம் உள்ளது என கூறியுள்ளார்.


Advertisement