சினிமா

அடக்கடவுளே! இங்கேயும் ஆரம்பிச்சாச்சா.! பிக்பாஸ் சாண்டி செய்யுற அலப்பறையை பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ!!

Summary:

Bigboss sandy atrocities in kitcchen

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் நடன இயக்குனர் சாண்டி. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டம் வரைசென்று இரண்டாவது இடத்தை வென்றார்.

 சாண்டி பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே ஏதேனும் நகைச்சுவைகளை கூறிக்கொண்டு கலகலப்பாக இருக்கக்கூடியவர். அவர் இருக்குமிடத்தில்  எப்போதும் சிரிப்பு சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் விரும்பி பார்க்க அவரும் ஒரு காரணமாக இருந்தார் என கூறலாம். 

 இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சாண்டி போட்டியாளர்களுக்கு

வகைவகையாக பல உணவுகளை சமைத்து கொடுத்துள்ளார். மேலும் அப்பொழுது தான் வீட்டில் எனது மனைவிக்கு எந்த உதவியும் செய்ததில்லை எனவும் கூறி மிகவும் வருத்தப்பட்டு இருந்தார். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாண்டி தற்போது தனது வீட்டு சமையலறையில் கலக்கி வருகிறார். அதாவது தோசை உருண்டை என்று புதிய வகையான உணவை அவர் தயார் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். 


Advertisement