"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
பிக்பாஸ் ஜோடிகள் கிராண்ட் பினாலே! அசத்தலாக என்ட்ரி கொடுத்த மாஸ் பிரபலங்கள்!! வீடியோ இதோ..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முதல் சீசனில் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் பங்கேற்றனர்.
அந்த சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ராஜு மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர். ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் நடுவர்களாக உள்ள இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.
அதாவது அடுத்த வாரம் ஞாயிற்றுகிழமை கிராண்ட் பினாலே நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் நாகார்ஜுனா, ராஜமௌலி, ரன்பீர் கபூர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.