
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்ச
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறங்கி, நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூடியவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அனைத்து போட்டியாளர்களிடமும் அன்பு மழையை கொட்டினாலும், அவர் தனக்கென ஒரு குரூப் அமைத்துகொண்டு அவர்களை சுதந்திரமாக விளையாட விடாமல் முடக்கியதாகக் அவர் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தாத அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் தனது வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் நட்பு பாராட்டியும் வருகிறார். இந்த நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதாவிற்கு இன்று அவரது வீட்டில் கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களான ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, ரமேஷ், சோம், சம்யுக்தா, கேப்ரில்லா, அனிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Advertisement
Advertisement