திடீர்னு ஏன்மா இப்படி?? விவாகரத்து குறித்து பிக்பாஸ் அபினய் மனைவி வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!!

திடீர்னு ஏன்மா இப்படி?? விவாகரத்து குறித்து பிக்பாஸ் அபினய் மனைவி வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!!


Bigboss abinay post about divorce

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் அபினய். இவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் ஆவார். அபினய் இதற்கு முன்பு இராமானுஜம், சென்னை 600028 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் மிகவும் அமைதியாக இருந்த அபினய், சக போட்டியாளரும், சீரியல் நடிகையுமான பாவனியுடன் காதல் சர்ச்சையில் சிக்கி பெரும் விமர்சனத்திற்கு ஆளானார். மேலும் அவர் சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அபினய் மற்றும் அவரது மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெறவிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

மேலும் அபினய்யின் மனைவியும் இன்ஸ்டாகிராமில் அபர்ணா அபினய் என இருந்த தனது பெயரை அபர்ணா வரதராஜன் என்று மாற்றினார். இது ரசிகர்களுக்கு சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. ஆனால் பின்னர் அபினய் தான் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அபர்ணா தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் விவாகரத்து குறித்த பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், விவாகரத்து ஆகும் போது பெண்களுக்கு ஜீவனாம்சம் தரும் நிலை வரவேண்டும். அதுதான் உண்மையான gender equality என தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள், ஏன் நீங்கள் விவாகரத்துச் செய்யும் எண்ணத்தில் உள்ளீர்களா? திடீரென ஏன் இந்த பதிவு என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.