சினிமா

விடாது கஸ்தூரியை வெச்சு செய்யும் வனிதா! வனிதா போட்ட ட்வீட்டால் மீண்டும் எழுந்த பிரச்சனை!

Summary:

Big boss vanitha kasthuri

பிக்பாஸ் சீசன் 3 நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகை வினிதா. இவர் எப்போதும் பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களின் விஷயத்தில் தலையிட்டு சண்டை ஏற்படுத்துவதே இவரது செயலாக இருந்தது.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நடிகை கஸ்தூரியிடம் சண்டை போட்டார். அதாவது ஒரு தடவை கஸ்தூரி தன்னை வாத்து என கூறிவிட்டதாக பிரச்சனையை ஏற்படுத்தினார்.

அதனை விடாது தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு கஸ்தூரியிடம் வனிதா ட்வீட்டரில் வாத்து என ஏன் கூறினீர்கள் என கேட்டுள்ளார். 

அதற்கு கஸ்தூரி பதில் கூற இருவரும் மாறி மாறி பேசி கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் கோபமான வனிதா வாயை மூடுங்கள் கஸ்தூரி உங்களுக்கு சென்ஸ் என்பதே கிடையாதா, தான் உங்களை ப்ளாக் செய்கிறேன் என கூறி விட்டு சென்றுள்ளார். 


Advertisement