வாவ் வேற லெவல்... கோலாகலமாக நடந்த பிக்பாஸ் லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலாகும் அழகிய கியூட் வீடியோ...

வாவ் வேற லெவல்... கோலாகலமாக நடந்த பிக்பாஸ் லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலாகும் அழகிய கியூட் வீடியோ...


Big boss losliya birthday celebration video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களால் பெருமளவில் கவரப்பட்டு பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. இவரது  குழந்தை  போன்ற  பேச்சு, அழகான  சிரிப்பு பலரையும்  கவர்ந்த  நிலையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களில் இவருக்கு ஆர்மி உருவானது.

மேலும் சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி ஏராளமான விமர்சனங்களை சந்தித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் சினிமாவில் பிஸியாகிவிட்டார். லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் என தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக  நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மிக விமர்சையாக கொண்டாடியுள்ளார். இங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை ஒரே தொகுப்பாக்கி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.