கோலாகலமாக கண்ணம்மா வீட்டில் நடந்த கொண்டாட்டம்! தனியாக தவித்த பாரதிக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்! வைரல் வீடியோ!!

கோலாகலமாக கண்ணம்மா வீட்டில் நடந்த கொண்டாட்டம்! தனியாக தவித்த பாரதிக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்! வைரல் வீடியோ!!


Bharathi kannamma promo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. அந்த தொடரில் வில்லி வெண்பாவின் கொடூர சதியால் ஹீரோ பாரதி மனைவி கண்ணம்மாவை சந்தேகபட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  மேலும் அண்மைய எபிசோடுகளில் பல ரகசியங்கள் வெளிவந்த நிலையில் இருவரும் எப்போது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் ஆசிரமத்தில் இருந்து எடுத்து வந்து வளர்க்கப்படுவதாக எண்ணிய ஹேமாவிற்கு அவர் கண்ணம்மாவின் மகள்தான் என தெரிய வந்தநிலையில் ஹேமா கண்ணம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது கண்ணம்மா வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது. அதில் பாரதி குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் பாரதி மட்டும் தனியாக வீட்டில் ஹேமாவின் பிரிவால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கண்ணம்மா கூறியதை கேட்டு ஹேமா பாரதி வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு இனிப்பு ஊட்டிவிட்டு  தீபாவளியை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.