அதுக்கே துப்பு இல்லை.. நீ பெரிய தியாகியா.! பாரதியை வெளுத்து வாங்கிய கண்ணம்மா.! உதறி தள்ளிய ஹேமா! பரபரப்பு ப்ரோமோ வீடியோ!!

அதுக்கே துப்பு இல்லை.. நீ பெரிய தியாகியா.! பாரதியை வெளுத்து வாங்கிய கண்ணம்மா.! உதறி தள்ளிய ஹேமா! பரபரப்பு ப்ரோமோ வீடியோ!!


Bharathi kannamma promo video viral

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் ஹீரோயின் கண்ணம்மா மீது கொண்ட சந்தேகத்தால் பல ஆண்டுகளாக அவரை விட்டு பிரிந்து வாழ்ந்த ஹீரோ பாரதி ஒரு வழியாக குழந்தைகள் ஹேமா மற்றும் லட்சுமி தனது பிள்ளைகள்தானா என டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிறார். அதன் முடிவு வர தாமதமாகிறது. இதற்கிடையில் வெண்பா வீட்டில் ரோகித்தை திருமணம் செய்துகொள்ள ஒத்துகொள்வது போல நடித்து ஏமாற்றி, தன் சூழ்ச்சியால் பாரதியை திருமணம் செய்ய திட்டமிடுகிறார். 

வெண்பா பிளான் போட்டப்படி மண்டபத்தில் இருந்து தப்பி கோவிலில் பாரதியை திருமணம் செய்து கொள்ள முயல்கிறார். அப்பொழுது தாலி கட்டும் நேரத்தில் அங்கு விரைந்து திருமணத்தை நிறுத்திய கண்ணம்மா பாரதியை கேள்வி மேல் கேள்வி எழுப்பி வெளுத்து வாங்குகிறார். இந்நிலையில் வெண்பாவை ஏன் திருமணம் செய்துகொள்கிறாய் என அனைவரும் கேட்க, வெண்பா கர்ப்பமாக உள்ளார், அவரது குழந்தைக்கு சமூகத்தில் அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள வந்ததாக பாரதி கூறுகிறார்.

இதனை கேட்டு கடுப்பான கண்ணம்மா, உனக்கு பொறந்த குழந்தையை பாத்துக்கவே துப்பு இல்லை, எவனோட குழந்தைக்கு நீ அப்பாவா இருக்க போறியா என விளாசியுள்ளார். மேலும் ஹேமாவும் பாரதி மீது கோபம் கொண்டு அவரை உதறி தள்ளிவிட்டு கண்ணம்மாவுடன் செல்கிறார். இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி விறுவிறுப்பை கூட்டியுள்ளது.