மணமேடையில் காத்திருக்கும் வெண்பா.! நடக்கப்போவது என்ன? வெளிவந்த பரபரப்பான ப்ரமோ.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!Bharathi kannamma promo video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் பாரதி கதாபாத்திரத்தில் ஹீரோவாக அருண், கண்ணம்மாவாக வினுஷா மற்றும் வில்லி வெண்பாவாக பரினா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த தொடரில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாரதியை சதி வலையில் வீழ்த்தி அவரை திருமணம் செய்து கொள்ள வெண்பா முயற்சி செய்கிறார். ஆனால் பாரதி தனக்கு ஹேமா மற்றும் லட்சுமிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த ரிசல்ட் வந்த பிறகே திருமணம் செய்து கொள்வது குறித்து முடிவு எடுக்க எண்ணியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது பரபரப்பான புதிய ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். வெண்பா மற்றும் ரோஹித்க்கு இடையே திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகிறது. பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்லும் இத்தொடரை காண ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.