பிரபல சீரியல் வில்லியுடன் காதலில் விழுந்தாரா டாக்டர் பாரதி! நடந்தது என்ன?? தீயாய் பரவும் தகவல்!!bharathi-kannamma-love-with-archana-news-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதிகண்ணம்மா. இந்த தொடரில் ஹீரோவாக, பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்  அருண் பிரசாத். இவர் இதற்கு முன்பு மேயாத மான் திரைப்படத்தில் நடிகர் வைபவ்வுக்கு நண்பனாக நடித்து இருந்தார்.

மேலும் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் அருணுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்டு விழாவில் சிறந்த ஹீரோவுக்கான விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அவருக்கு என்ற விருதும் கிடைக்கவில்லை.

bharathi kannamma

மேலும் அண்மையில் நடைபெற்ற விருது விழாவில் ராஜாராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வரும் நடிகை அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது. அப்பொழுது விருது வாங்க அர்ச்சனா மேடைக்கு வந்தபோது தொகுப்பாளர்கள் டாக்டர், பாரதி, டிஎன்ஏ போன்ற வார்த்தைகளை கூறி கிண்டல் செய்தனர். அதனை தொடர்ந்து அருண் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக செய்திகள் வலம் வரத்துவங்கியது. ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.