சினிமா

வாவ்.. பாரதி கண்ணம்மா அகிலனுக்கு செம அதிர்ஷ்டம்தான்! அதுவும் யாருடன் நடிக்கிறார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படங்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் பாரதியாக அருண்பிரசாத், கண்ணம்மாவாக ரோஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் பாரதிகண்ணம்மா தொடரில் ரூபஸ்ரீ, ரிஷி, அகிலன், ஸ்வீட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இத்தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான அகிலன் ஒரு மாடல் ஆவார். இவர் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து தற்போது அகிலன் இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகும் விஷாலின் 31வது திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும், சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் புகைப்படங்கள், வீடியோக்கள் அண்மையில் இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் அகிலன் விஷால் மற்றும் யோகிபாபுடன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement