துக்க நிகழ்ச்சிகளில் இப்படியொரு கேவலமான செயலா.? பிஹைண்ட்வுட் சேனலின் அதிரடி அறிவிப்பு.!

துக்க நிகழ்ச்சிகளில் இப்படியொரு கேவலமான செயலா.? பிஹைண்ட்வுட் சேனலின் அதிரடி அறிவிப்பு.!


behindwoods-sudden-decision

இயக்குனரும் நடிகருமான திரு விஜய் ஆண்டனி அவர்களின் மகள் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இச்செய்தியை பல ஊடகங்களும் பலவிதமாக செய்தியாக வெளியிட்டன. மேலும் துக்கத்துக்கு வருவோரை பேட்டி எடுப்பதும், அவர்களிடம் கருத்துக்களை, கேட்பதுமாக இருந்தனர்.

you tube

இதை பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல யூ டியூப் சேனலான "பிகைன்ட்வுட்ஸ்" இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. 

மேலும் இனி எந்த பிரபலத்தின் இறப்பு செய்தியையும் பிகைன்ட்வுட்ஸ் சேனலில் தாங்கள் வெளியிட மாட்டோம் என்றும் மரணம் மற்றும் அதை சார்ந்த விஷயங்கள் ஒரு "தனி நபரின் சொந்த விஷயம்" என்பதாலும் அங்கு இருக்கும் உறவினர்கள் அவர்களின் உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் இனி பிகைன்ட்வுட்ஸ் சேனல் அதுபோன்ற செய்திகளை வெளியிடவோ திரையிடவோ செய்யாது என்று அறிவித்துள்ளனர்.

 you tube

மேலும் இதுவரை தாங்கள் செய்த செயலோ திரையிட்ட காட்சிகளோ இறப்பு சம்பந்தமாக வெளியிட்ட வீடியோக்களும் யார் மனதையேனும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.