நீங்க காட்ட உரிமையிருக்கு.. நான் பேசக்கூடாதா??.. பயில்வான் ரங்கநாதன் தடாலடி பேச்சு..! Bayilvan Ranganathan Latest Speech

 

திரையுலகில் நடக்கும் பல்வேறு சர்ச்சைகள் குறித்து வீடியோ வெளியிட்டு தமிழகத்தை பரபரப்பாக்கும் பயில்வான் ரங்கநாதன், வெளியிட்டுள்ள வீடியோவில், "நடிகர் பப்லூ கமல் ஹாசனை போல சிறுவயதில் இருந்து நடித்து கொண்டு இருந்தவர். அவர் 25 வயதில் வீணா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 

இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தை பிறந்தது. குழந்தையை அவர்கள் பாசமாக வளர்த்தாலும், பின்னாளில் பிரச்சனை எழுந்தது. இதனால் இருவரும் சண்டையிட்டு கொண்டு இருந்தனர். இறுதியில் வீணா பப்லூவை விட்டு பிரிந்து சென்றார். தற்போது பப்லூ மலேஷியாவில் தொழில் தொடங்க முயற்சித்த தருணத்தில், 23 வயது பெண் அவருக்கு உதவி கிடைத்தது. 

நடிகர் பப்லூவிற்கு 55 வயதாகும் நிலையில், தனது உடற்கட்டுக்கு உடற்பயிற்சி செய்வதே காரணம் என்று கூறினார். அவர் 55 வயதிலும் துடிப்பாக இருக்கிறார். தனது உடல் திடகாத்திடமாக இருக்க எனது மனைவி உதவுகிறார். அவர் மலேஷிய பெண்மணி என கூறினார். காதலுக்கு வயது தேவையில்லை என்பதை உறுதி செய்து 55 வயதிலும் 23 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். 

பப்லூ திருமணம் செய்வது அவரின் தனிமனித உரிமை. அவர்களுக்கு பிடித்து திருமணம் செய்து வாழ்கிறார்கள். நான் பல நடிகர்களை இழிவுபடுத்துகிறேன் என கூறுகிறார்கள். நான் ஒழுக்கமான நடிகர் & நடிகைகளை விமர்சிப்பது இல்லை. இன்றுள்ள நடிகர் & நடிகைகள் உடல் உறுப்புகளை காட்டிக்கொண்டு போட்டோ வெளியிடுகிறார்கள். அவர்களின் மீது வழக்குப்போடுங்கள். 

அவர்கள் காட்ட உரிமை இருக்கிறது என்றால், நான் பேசவும் உரிமை உள்ளது. நான் நடப்பதை கூறுகிறேன். அவதூறு கூறவே இல்லை. நான் ஆபாச பதிவுகள் பதிவிடுவது இல்லை. நீங்கள் எங்கு சென்று புகார் அளித்தாலும், நான் உண்மையை பேசுவதாலேயே எதுவும் செய்ய இயலவில்லை" என்று தெரிவித்தார்.