சினிமா

விஜய் டீவியில் இருந்து சன் டிவிக்கு மாறும் பிரபல நடிகை! புது தொடரில் விரைவில் அறிமுகம்.

Summary:

Bavani reddy moved to sun tv from vijay tv

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலம். சூப்பர் சிங்கர், நீயா நானா? தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் என பெரும்பாலான தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் சூப்பர் ஹிட் அடித்துவருகிறது. அந்த வகையில் நடிகர் ப்ரஜன் மற்றும் பவானி ரெட்டி நடிப்பில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர் சின்னத்தம்பி. இதில் ப்ரஜன் சின்னத்தம்பி என்ற கதாபாத்திரத்திலும், பவானி ரெட்டி நந்தினி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த தொடர் சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது. தற்போது பவானி ரெட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ராசாத்தி என்ற புது தொடரில் நடிக்க உள்ளார். இதற்கு முன்னர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் கதாநாயகியாக நடித்த சரண்யா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரன் என்ற தொடரில் நாயகியாக நடித்துவருகிறார்.

சரண்யாவை தொடர்ந்து தற்போது நந்தினியும் சன் தொலைக்காட்சிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement