சினிமா

அடேங்கப்பா.. தனது ஹேர் ஸ்டைலை மாற்றி வேற லெவலில் மாறிய பிக்பாஸ் பாவனி! வைரலாகும் மாஸ் வீடியோ!!

Summary:

அடேங்கப்பா.. தனது ஹேர் ஸ்டைலை மாற்றி லெவலில் மாறிய பிக்பாஸ் பாவனி! வைரலாகும் மாஸ் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5ல்  போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தலாக விளையாடி இறுதிநிலை வரை சென்றவர் பாவனி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் ஹீரோயினாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

மேலும் அதற்கு முன்பு அவர் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவனி கடந்த 2013ஆம் ஆண்டு தன்னுடன் சீரியலில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால்  திருமணமான ஒரு சில வருடங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.

அண்மையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாவனிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பாவனி புது ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். அவர் முடியை கலர் செய்து வித்தியாசமாக மாறியுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.


Advertisement