சினிமா

உங்களோட இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்! சிவகார்த்திகேயனை மகிழ்ச்சியில் மூழ்கடித்த முன்னணி பிரபலம்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

Bavan kalyan replied to sivakarthicken wishes

தெலுங்குத் திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். அவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயனும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பவன்கல்யாண், அன்பார்ந்த சிவகார்த்திகேயன். உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள். உங்களது ஊதா கலரு ரிப்பன் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை எத்தனையோ முறை பார்த்து  ரசித்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனைக் கண்டு நெகிழ்ந்துப் போன நடிகர் சிவகார்த்திகேயன், உங்களது பதிலைக் காணும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது சார். ஊதா கலர் ரிப்பன் பாடல் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என  சொல்வது மிகுந்த உற்சாகமாக இருக்கிறது. உங்களது நேரத்தை ஒதுக்கி எனது அன்பை ஏற்றுக் கொண்டமைக்கும் உங்களது கனிவான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி என உற்சாகத்துடன் பதில் அளித்துள்ளார்.


Advertisement