ஒரே அன்புதொல்லைதான்.. இரட்டை மகன்களை வைத்து பரத் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!

ஒரே அன்புதொல்லைதான்.. இரட்டை மகன்களை வைத்து பரத் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!!


barath-exercise-with-her-twin-children-video-viral

தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். அதனைத் தொடர்ந்து அவர் விஷால் ஹீரோவாக நடித்த செல்லமே திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.

பின்னர் காதல் திரைப்படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமடைந்த அவர்  தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் பரத் நடிப்பு மட்டுமின்றி நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். நடிகர் பரத்தின் மனைவி ஜெஸ்லி ஜோஸ்வா. பல் மருத்துவரான இவர் பரத்தின் சிறுவயது நண்பர் ஆவார். பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில் தனது மகன்களின் புகைப்படங்களை, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வரும் நடிகர் பரத் தற்போது உடற்பயிற்சி செய்யவிடாமல் அன்புத்தொல்லை கொடுக்கும் தனது இரட்டை குழந்தைகளையே வைத்து உடற்பயிற்சி செய்த ஜாலியான வீடியோவை வெளியிட்டுள்ளார். அது பெருமளவில் வைரலாகி வருகிறது.