"பாக்கியராஜிடம் அடி வாங்கி அழுத பிரபல நடிகை" பேட்டியில் உண்மையை போட்டுடைத்த நடிகை.!



Bagyaraj beated famous actress at shooting spot

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்களில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பாக்யராஜ். இவர் 1978ம் ஆண்டு புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பாக்யராஜ்.

Bhakyaraj

அதே சமயம் 25க்கும் அதிகமான படங்களை இயக்கியும், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், 1982ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "தூறல் நின்னுப் போச்சு". இளையராஜா இசையமைத்த படத்தில் சுலக்ஷனா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் சுலக்ஷனாவின் நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தாராம். இயக்குனர் பாக்யராஜிடம் பலமுறை சுலக்ஷனா அடி வாங்கியுள்ளாராம். அவர் அழுவது போல் வரும் காட்சிகளில் எல்லாம் பாக்யராஜிடம் அடி வாங்கி நிஜமாகவே அழுவாராம்.

Bhakyaraj

மேலும். ஒரு காட்சியில் சுலக்ஷனா நெருப்பின் மீது நின்று கொண்டு பேசுவது போல் இருக்கும். அப்போது நிஜமாகவே கீழே நெருப்பு எரிய, அதன் மீது நின்று கொண்டு தான் சுலக்ஷனா அந்தக் காட்சியில் நடித்தாராம். இப்படியெல்லாம் நடித்தால் தான் நடிக்க கற்றுக்கொள்ள முடியும் என்று பாக்யராஜ் கூறியதாக சுலக்ஷனா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.