கோபியிடம் கோபித்துக்கொண்டு பிரபுதேவாவிடம் தஞ்சமடைந்த பாக்கியலட்சுமி..! வெளியான புகைப்படம்..!!baakyalakshmi serial actress acting movie

தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு நீங்காமல் இருக்கும். அதுபோல, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சுசித்ரா. இவர் இந்த தொடரின் மூலமாக மக்களிடையே பரீட்சியமானார். 

இவர் தமிழில் நடிக்கும் முதல் சீரியல் இதுவே ஆகும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மக்களிடையே பெருத்த தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருந்த பாக்கியலட்சுமி தொடர் டிஆர்பி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

Gobi

மேலும் இல்லத்தரசிகள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகள் தொடர்பாக கதை அம்சம் இருப்பதால், மக்கள் மத்தியில் பல பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை சுசித்ரா திரைத்துறையில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கன்னட மற்றும் தமிழ்மொழியில் தயாராகும் புதிய படத்தில் பிரபுதேவாவுக்கு அம்மாவாகவும் அவர் நடிக்கவுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் அமைதியான அம்மாவாக நடித்து, தற்போது அசத்தி வரும் சுசித்ராவிற்கு இந்த வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. அவர் பிரபுதேவாவுடன் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பரவி வருகிறது. இதைக்கண்ட ரசிகர்கள் கோபியிடம் கோபமடைந்து பிரபுதேவாவிடம் தஞ்சமடைந்த பாக்கியலட்சுமி என கலாய்த்து வருகின்றனர்.