அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அய்யனார் துணை சீரியல் நடிகர்கள் அந்தமானுக்கு சுற்றுலா சென்று நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல நட்சத்திர சீரியல்களில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ள நெடுந்தொடர் அய்யனார் துணை. இந்த கதையை பொறுத்தவரையில் தற்போது நிலாவை வெறுப்பேற்ற முடிவுடன் இருக்கும் சோழன் பேருந்து நிறுத்தத்தில் காயத்ரி என்ற பெண்ணிடம் நெருக்கமாக பேசுவது போல நாடகமாடி வந்தார்.
அய்யனார் துணை சீரியல்:
அந்த பெண் சோழனை நிஜமாக காதலித்ததாக கதைக்களம் நகரும் நிலையில், சோழன் முன்னதாகவே திருமணமானவர் என தெரிந்து, தனக்கு சோழன் இல்லை என்றதும் காயத்ரி நண்பர்களின் வீட்டிற்கு சென்று கதவை பூட்டி அழுது கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து நிலா அவரை சமாதானப்படுத்த வீட்டுக்கு பல்லவனுடன் செல்கிறார்.
ஸ்கூபா டைவிங் சென்றுள்ள நடிகர்கள்:
இதனால் அடுத்ததாக கதைக்களம் எப்படி நகர போகிறது? என்று பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் பலரும் தற்போது சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.