அயலான் திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



Ayalaan Movie Sensor Certificate as U 

 

ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான் (Ayalaan).

இப்படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர்.

கடந்த 2018ம் ஆண்டுக்கு பின்னரே அயலான் திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது எனினும், அடுத்தடுத்து கொரோனா உட்பட பல காரணங்களால் படம் தள்ளிப்போய், தற்போது வெளியீடுக்கு தயாராகி இருக்கிறது.

படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில், அயலான் திரைப்படத்திற்கு யு (U) சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பை படக்குழு உறுதி செய்துள்ளது. படம் உலகளவில் ஜனவரி மாதம் 12ம் தேதி 2024 அன்று வெளியாகிறது.