அயலான் 2 உறுதி: இயக்குனர் ஆர். ரவிக்குமார் அறிவிப்பு.! நடிப்பது இவர்தானாம்.!

அயலான் 2 உறுதி: இயக்குனர் ஆர். ரவிக்குமார் அறிவிப்பு.! நடிப்பது இவர்தானாம்.!



Ayalaan Movie 2 Confirmed by Ravi Kumar 

 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான். வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன் தொடர்பான கதை படமாக உருவாகியுள்ளது.

படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், டேவிட் ப்ரோட்டன்-டேவிஸ், பானுப்ரியா, பாலசரவணன், கோதண்டம், ராகுல் மாதவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் டிரைலர் காட்சிகள், பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அயலான் படத்தின் இசை வெளியீடு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படம் பொங்கல் பந்தடிகையை முன்னிட்டு ஜனவரி 12 அன்று வெளியாகிறது.

இந்நிலையில், அயலான் படத்தில் இரண்டாவது பாகத்தை சிவகார்த்திகேயனிடம் கூறி இருப்பதாகவும், அவரும் தான் அயலான் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.