சினிமா

தல அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு தென்னிந்திய சினிமாவிருதுகள் அறிவிப்பு.! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

தமிழ் சினிமாவில் 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், சிறந்த நடிகர் நடிகைகளுக்கான தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய தாதாசாகேப் பால்கே திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் அஜித், தனுஷ், பார்த்திபன், ஜோதிகா உள்ளிட்டோர் இந்த விருதை வென்றுள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

ஆர்.பார்த்திபன் இயக்கிய ஒத்தசெருப்பு சைஸ் 7 திரைப்படம் மூலம் சிறந்த இயக்குநருக்கான தாதாசாகேப் பால்கே விருதை இயக்குநர் பார்த்திபன் வென்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை அனிருத் ரவிச்சந்திரன் வென்றுள்ளார்.

சிறந்த பன்முகத்திறமை வாய்ந்த நடிகருக்கான தாதாசாகேப் விருதை தல அஜித் தட்டிச் சென்றுள்ளார். இயக்குநர் கெளதம் ராஜ் இயக்கத்தில் வெளியான ராட்சசி திரைப்படத்தில் நடித்ததன் மூலம்  நடிகை ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். 


Advertisement