அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அவதார் 2... முதல் நாளிலேயே இவ்வளவு வசூலா!!Avatar 2 box office collection

உலக சினிமா வரலாற்றில் சில திரைப்படங்கள் பேசும் பொருளாக இருக்கும். அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக வெளிவந்து உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் தான் அவதார். அந்த படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. 

பல வித்தியாசமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் அனைவரையும் வியப்பில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. உலகம் முழுவதும் 25 கோடி கலெக்சன் செய்ததாக கூறப்படுகிறது.

Avatar 2

இந்நிலையில் பிரம்மாண்டத்தின் அடுத்தகட்டமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாக்கியுள்ளது. அவதார்: தி வே ஆப் வாட்டர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆனால் நேற்று டிசம்பர் 15 சில நாடுகளில் மட்டும் வெளியாகியுள்ளது. அப்படி வெளியான சில நாடுகளில் மட்டுமே படம் 16 மில்லியன் டாலர் வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.