அவன் இவன்... விஷால், ஆர்யா பட நடிகருக்கு கண்ணீர் அஞ்சலி.!? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் புகைப்படம்..!avan-ivan-movie-actors-posted-about-his-death

தமிழ்திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஜி.எம் குமார், முதன்முதலில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த 'அறுவடை நாள்' திரைப்படத்தின் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் இளையராஜா இசையமைத்துள்ளார். முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்து படங்களை இயக்க வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது.

அவன் இவன்

இதன்பின் பிக்பாக்கெட், உருவம், இரும்பு பூக்கள் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதனால் இயக்கத்திற்கு ஓய்வு குடுத்த ஜி.எம் குமார் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார். 2002ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெயில், மலைகோட்டை, மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஜி.எம் குமார், விஜய் வழங்கும் சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதை பெற்றார்.

அவன் இவன்

இந்நிலையில், ஜி.எம் குமார் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து அந்த பக்கத்தின் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அப்படியில் "ஆயிரக்கணக்கான நகைசுவைகளின் வெளிப்பாடு தான் வாழ்க்கை" என்று கூறியிருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடனும், வருத்தத்துடனும் பகிர்ந்து வருகின்றனர்.